விளையாட்டு

IND vs AUS 1st Test: வலுவான நிலையில் இந்திய அணி – ஆஸ்திரேலியா திணறல்

Published

on

IND vs AUS 1st Test: வலுவான நிலையில் இந்திய அணி – ஆஸ்திரேலியா திணறல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்ட்டில் இந்திய அணி வலுவான நிலையில் விளையாடி வருகிறது.

Advertisement

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் விளையாடுவதற்கு இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், பெர்த் நகரில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இந்திய வீரர்கள், 50 ஓவருக்குள் 150 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தனர். பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலியா வீரர்களும் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அடுத்தடுத்து ஆட்டமிழந்த ஆஸ்திரேலியா வீரர்கள் முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 67 ரன்களே எடுத்தனர்.

இதையும் படிக்க:
ஹர்ஷித் ரானாவை மிரட்டிய மிட்செல் ஸ்டார்க்.. களத்தில் என்ன நடந்தது?

Advertisement

இந்நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலியா 104 ரன்களில் சுருண்டது. கேப்டன் பும்ரா 30 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளும், சிராஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 26 ரன்களும் அலெக்ஸ் கேரி 21 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சற்று முன்பு வரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் சேர்த்துள்ளது. இதனால் இந்திய அணி தற்போது வரை 136 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version