விளையாட்டு

IPL Auction 2025: ஐபிஎல் இரண்டாம் நாள் ஏலம்.. அணிகளிடம் கைவசம் உள்ள தொகை எவ்வளவு?

Published

on

IPL Auction 2025: ஐபிஎல் இரண்டாம் நாள் ஏலம்.. அணிகளிடம் கைவசம் உள்ள தொகை எவ்வளவு?

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடருக்கான ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றுவருகிறது.

Advertisement

18வது ஐபிஎல் தொடருக்கான ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த ஐபிஎல் ஏலத்தில் அனைத்து அணிகளும் ரூ.120 கோடி வரை வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், வீரர்களை தக்கவைப்பதற்காகவும், நேற்று நடைபெற்ற ஏலத்திலும் அணிகள் பணத்தை செலவு செய்தன.

இதையும் படிக்க:
அஷ்வின், நூர் அகமதை வாங்கியது ஏன்? – சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்

Advertisement

ஏலத்தின் முதல் நாளான நேற்று 84 வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டார்கள். அவர்களில் 72 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டார்கள். மீதம் உள்ள 12 பேரை எடுக்க நேற்று எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ. 467.95 கோடியை வீரர்களை ஏலத்தில் எடுப்பதற்காக அணிகள் செலவு செய்துள்ளது.

இந்த நிலையில், 2ஆம் நாள் ஏலம் தொடங்குவதற்கு முன்னர் ஐபிஎல் அணிகளிடம் எவ்வளவு தொகை மீதம் உள்ளது என்பதை பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்: 15.60 கோடி
மும்பை இந்தியன்ஸ்: 26.10 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 10.05 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: 30.65 கோடி
குஜராத் டைட்டன்ஸ்: 17.50 கோடி
சன்ரைசர்ஸ் ஐதராபாத்: 5.15 கோடி
பஞ்சாப் கிங்ஸ்: 22.50 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ்: 17.35 கோடி
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்: 14.85 கோடி
டெல்லி கேப்பிடல்ஸ்: 13.80 கோடி

Advertisement

நேற்று ஏலத்தில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கும், ஸ்ரேயஸ் ஐயர் ரூ.26.75 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version