விளையாட்டு
IPL Auction 2025: ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணிகளிடம் எவ்வளவு தொகை உள்ளது?
IPL Auction 2025: ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணிகளிடம் எவ்வளவு தொகை உள்ளது?
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்று சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறவுள்ளது.
18வது ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்றும், நாளையும் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறவுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கவுள்ளன.
இந்த ஐபிஎல் ஏலத்தில் அனைத்து அணிகளும் ரூ.120 கோடி வரை வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அணிகள் வீரர்கள் தக்கவைப்பிற்காகவும் பணத்தை செலவு செய்துள்ளது. அப்படி எந்த அணியிடம் எவ்வளவு தொகை உள்ளது என்பதை பார்க்கலாம்.
இதையும் படிக்க:
மிட்செல் ஸ்டார்க் முதல் யுவராஜ் சிங் வரை… ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட 10 வீரர்கள்…
1. அணி: சென்னை சூப்பர் கிங்ஸ்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மதீஷா பத்திரனா, எம்எஸ் தோனி
செலவு செய்த தொகை: ரூ.65 கோடி
மீதம் உள்ள தொகை: ரூ.55 கோடி
2. அணி: மும்பை இந்தியன்ஸ்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா மற்றும் திலக் வர்மா
செலவு செய்த தொகை: ரூ.75 கோடி
மீதம் உள்ள தொகை: ரூ.45 கோடி
3. அணி: பஞ்சாப் கிங்ஸ்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங்
செலவு செய்த தொகை: ரூ.9.5 கோடி
மீதம் உள்ள தொகை: ரூ.110.5 கோடி
4. அணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள்
செலவு செய்த தொகை: ரூ.37 கோடி
மீதம் உள்ள தொகை: ரூ.83 கோடி
5. அணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ரின்கு சிங், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல், ஹர்ஷித் ராணா, ராமன்தீப் சிங்
செலவு செய்த தொகை: ரூ.69 கோடி
மீதம் உள்ள தொகை: ரூ.51 கோடி
6. அணி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஹென்ரிச் கிளாசென், பாட் கம்மின்ஸ், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி
செலவு செய்த தொகை: ரூ.75 கோடி
மீதம் உள்ள தொகை: ரூ.45 கோடி
7. அணி: ராஜஸ்தான் ராயல்ஸ்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மையர், சந்தீப் சர்மா
செலவு செய்த தொகை: ரூ.79 கோடி
மீதம் உள்ள தொகை: ரூ.41 கோடி
8. அணி: டெல்லி கேப்பிடல்ஸ்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல்
செலவு செய்த தொகை: ரூ.47 கோடி
மீதம் உள்ள தொகை: ரூ.73 கோடி
9. அணி: குஜராத் டைட்டன்ஸ்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ரஷித் கான், ஷுப்மான் கில், சாய் சுதர்சன், ராகுல் தெவாட்டியா, ஷாருக் கான்
செலவு செய்த தொகை: ரூ.51 கோடி
மீதம் உள்ள தொகை: ரூ.69 கோடி
10. அணி: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் அகர்வால், மொஹ்சின் கான், ஆயுஷ் படோனி
செலவு செய்த தொகை: ரூ.51 கோடி
மீதம் உள்ள தொகை: ரூ.69 கோடி