விளையாட்டு
IPL Auction 2025: ஐபிஎல் மெகா ஏலம் – எப்போது, எப்படி பார்ப்பது?
IPL Auction 2025: ஐபிஎல் மெகா ஏலம் – எப்போது, எப்படி பார்ப்பது?
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்று நடைபெறவுள்ளது.
18வது ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்றும், நாளையும் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் 10 ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் அவர்கள் அணியில் விளையாடும் வீரர்களை ஏலத்தில் எடுக்கவுள்ளனர்.
இந்த ஏலத்தில் 367 இந்திய வீரர்கள் மற்றும் 210 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 577 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
அவர்களில் ரூ.2 கோடியை அடிப்படைத்தொகையாக வைத்து 82 வீரர்களும், ரூ.1.5 கோடியை அடிப்படைத்தொகையாக வைத்து 27 வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிக்க:
மிட்செல் ஸ்டார்க் முதல் யுவராஜ் சிங் வரை… ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட 10 வீரர்கள்…
இந்த ஏலத்தில் ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரபாடா ஆகியோர் அதிகபட்சத்தொகைக்கு செல்லுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏலம் எங்கே நடைபெறுகிறது?:
2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் இன்று மற்றும் நாளை சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெறுகிறது. மேலும் இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்கு தொடங்குகிறது.
ஏலத்தை எங்கே பார்க்கலாம்?:
2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்க்கலாம்.
மேலும் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும், அதன் இணையதளத்திலும் இலவசமாக பார்க்கலாம்.