உலகம்

Jharkhand Election Results: ஜார்க்கண்ட் நட்சத்திர வேட்பாளர்களின் நிலை என்ன?

Published

on

Jharkhand Election Results: ஜார்க்கண்ட் நட்சத்திர வேட்பாளர்களின் நிலை என்ன?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீதமிருந்த 38 தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி இரண்டாம் கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த மாநிலம் 44 பொது தொகுதிகள், 28 பழங்குடி தொகுதிகள் மற்றும் 9 பட்டியலின தொகுதிகள் கொண்டவை.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியாகவும், பாஜக எதிரணியாகவும் தேர்தலை சந்தித்தன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன. இதில் ஆட்சியை பிடிக்க 41 தொகுதிகள் தேவை. மாநிலத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

மாலை 4 மணி நிலவரப்படி, காங்கிரஸ் கூட்டணி 55 இடங்களையும், பாஜக கூட்டணி 25 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இதில் சில தொகுதிகளில் இரு கட்சிகளும் வெற்றியும் அடைந்துள்ளன. இதில் சில முக்கிய வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை பார்ப்போம்.

பர்ஹைட் தொகுதி:

இந்தத் தொகுதியில் அந்த மாநிலத்தின் ஆளும் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவரும், முதலமைச்சருமான ஹேமந்த் சோரன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜக தரப்பில் கமாலியேல் ஹெம்ப்ரோம் போட்டியிட்டார். மாலை 4 மணி நிலவரப்படி ஹேமந்த் சோரன் மொத்தம் 94,840 வாக்குகளைப் பெற்றுள்ளார். கமாலியேல் ஹெம்ப்ரோம் மொத்தம் 55,424 வாக்குகளை பெற்றுள்ளார். ஹேமந்த் சோரன் 39,416 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்துவருகிறார்.

Advertisement

தன்வார் தொகுதி:

இந்தத் தொகுதியில் பாஜகவின் ஜார்க்கண்ட் மாநிலத் தலைவர் பாபுலால் மராண்டி போட்டியிட்டார். இவரை எதிர்த்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் நிசாமுதீன் அன்சாரி என்பவர் போட்டியிட்டார். இதில், பாபுலால் மராண்டி மொத்தம் 53,749 வாக்குகளை பெற்றுள்ளார். அன்சாரி மொத்தம் 34,046 வாக்குகளைப் பெற்றுள்ளார். பாபுலால் மராண்டி 19,703 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

நலா தொகுதி:

Advertisement

இந்தத் தொகுதியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் ரபிந்திர நாத் மஹதோ போட்டியிட்டார். இவர் தற்போதைய ஜார்க்கண்ட் சட்டமன்றத்தின் சபாநாயகர். இவரை எதிர்த்து பாஜக சார்பில் மகாதேவ் ஷந்த்ரா மஹதோ போட்டியிட்டார். ரபிந்திர நாத் மொத்தம் 71,445 வாக்குகளையும், மகாதேவ் மொத்தம் 60,195 வாக்குகளையும் பெற்றுள்ளன. இதில் ரபிந்திர நாத் 11,250 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்துவருகிறார்.

இதையும் படியுங்கள் :
Maharashtra Election Results: “தேர்தல் முடிவுகளில் முறைகேடு.. இது மக்கள் முடிவு இல்லை” – உத்தவ் அணி பகீர் குற்றச்சாட்டு

டும்ரி தொகுதி:

Advertisement

இந்தத் தொகுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் பெண்கள், குழந்தைகள் மேம்பாடு துறை அமைச்சர் பீபி தேவி போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜக கூட்டணியில் உள்ள அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் சார்பில் யசோதா தேவி என்பவர் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து இந்த இரு வேட்பாளர்களும் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.

டும்ரி தொகுதியில், ஜார்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெய்ராம் குமார் மஹதோ மொத்தம் 94,496 வாக்குகள் பெற்று அமைச்சர் பீபி தேவியை 10,945 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடையச் செய்துள்ளார்.

மதுபூர் தொகுதி:

Advertisement

இந்தத் தொகுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிறுபான்மைத் துறை அமைச்சர் ஹஃபிசுல் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பாக போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் கங்கா நாராயண சிங் என்பவர் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் 23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. இதில், 16 சுற்று வாக்கு எண்ணிக்கை தற்போதுவரை முடிந்துள்ளது.

அதில் இருவருக்கும் இடையே வெறும் 750 வாக்குகள் மட்டுமே வித்தியாசத்தில் உள்ளது. இந்தத் தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் :
Wayanad By Election: மிஸ்ஸான பிரியங்கா காந்தி? ராபர்ட் வதேரா சொன்ன தகவல்

Advertisement

மகாகம் தொகுதி:

இந்தத் தொகுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் வேளாண் துறை அமைச்சரும் காங்கிரஸ் வேட்பாளருமான தீபிகா பாண்டே சிங் போட்டியிட்டிருக்கிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் அஷோக் குமார் என்பவர் போட்டியிட்டு இருக்கிறார்.

தீபிகா மொத்தம் 1,03,267 வாக்குகளை பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்டுள்ள அஷோக் குமார் மொத்தம் 86,910 வாக்குகளை பெற்றுள்ளார். தீபிகா 16,357 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்துவருகிறார்.

Advertisement

ஜம்தாரா தொகுதி:

இந்தத் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் இர்ஃபான் அன்சாரி போட்டியிட்டுள்ளார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் சிதா முர்மூ போட்டியிட்டுள்ளார். இதில், இர்ஃபான் 49,008 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்துவருகிறார்.

காண்டே தொகுதி:

Advertisement

இந்தத் தொகுதியில் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் போட்டியிட்டுள்ளார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் முனியா தேவி போட்டியிட்டார். கல்பனா சோரன் 13,056 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

சரிகேலா தொகுதி:

இந்தத் தொகுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தேர்தலுக்கு முன்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவருமான சம்பாய் சோரன் போட்டியிட்டுள்ளார். இவரை எதிர்த்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் கணேஷ் மஹாலி போட்டியிட்டுள்ளார். இதில், சம்பாய் சோரன் 18,836 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்துவருகிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version