உலகம்

Maharashtra & Jharkhand Election Results: “வளர்ச்சி வெல்லும்.. ஒன்றுபட்டால் இன்னும் உயருவோம்” – பிரதமர் மோடி

Published

on

Maharashtra & Jharkhand Election Results: “வளர்ச்சி வெல்லும்.. ஒன்றுபட்டால் இன்னும் உயருவோம்” – பிரதமர் மோடி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளில் மாலை 5 மணி நிலவரப்படி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 57 இடங்களிலும், பாஜக கூட்டணி 23 இடங்களிலும் முன்னிலை வகித்துவருகின்றன.

தற்போது உள்ள முன்னிலை நிலவரப்படி ஜார்க்கண்ட் மாநிலத்தில் மீண்டும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ளலாம்.

Advertisement

இந்நிலையில், “பாஜக கூட்டணிக்கு வாக்களித்த ஜார்க்கண்ட் மக்களுக்கு நன்றி. மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதிலும், மாநிலத்திற்காக உழைப்பதிலும் முன்னணியில் இருப்போம். ஆட்சி அமைக்க உள்ள ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியை வாழ்த்துகிறேன்” என பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதேபோல், 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 231 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 51 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. இதன் மூலம் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது.

இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “வளர்ச்சி வெல்லும்! நல்லாட்சி வெற்றி! ஒன்றுபட்டால் இன்னும் உயருவோம்!

Advertisement

மகாராஷ்டிராவைச் சேர்ந்த எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு, குறிப்பாக மாநிலத்தின் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு, என்.டி.ஏ-வுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்கியதற்காக மனமார்ந்த நன்றி. இந்த பாசமும் அரவணைப்பும் இணையற்றது.

இதையும் படியுங்கள் :
Jharkhand Election Results: ஜார்க்கண்ட் நட்சத்திர வேட்பாளர்களின் நிலை என்ன?

மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக எங்கள் கூட்டணி தொடர்ந்து உழைக்கும் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version