உலகம்

Maharashtra, Jharkhand Election Results: 2019 vs 2024 – மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ஆளுங்கட்சிகளுக்கு உயர்வா?… சரிவா?

Published

on

Maharashtra, Jharkhand Election Results: 2019 vs 2024 – மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ஆளுங்கட்சிகளுக்கு உயர்வா?… சரிவா?

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட்டில் வெற்றி பெற்ற ஆளும் கட்சிகள், 2019இல் வென்ற இடங்களை விட கூடுதல் இடங்களை கைப்பற்றியுள்ளன.

மகாராஷ்டிராவில், 2019 தேர்தலில் 105 தொகுதிகளில் வென்ற பாஜகவுக்கு தற்போது கூடுதலாக 27 இடங்கள் கிடைத்துள்ளன. அப்போது, ஒருங்கிணைந்த சிவசேனாவாக 56 இடங்களில் வென்றிருந்த நிலையில், தற்போது ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு 57 இடங்களும், உத்தவ் தாக்கரே தரப்புக்கு 20 தொகுதிகளும் கிடைத்துள்ளன.

Advertisement

2019இல் ஒருங்கிணைந்த தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களை பெற்றிருந்த நிலையில், தற்போது அஜித் பவார் தரப்புக்கு 41 இடங்களும், எதிரணியில் இருந்த சரத்பவார் தரப்புக்கு 10 இடங்களும் கிடைத்துள்ளன. 2019இல் 44 இடங்களை வென்ற காங்கிரஸ், பெரும் வீழ்ச்சியாக, இந்த தேர்தலில் 28 இடங்களை இழந்துள்ளது.

அதேபோல், ஜார்க்கண்ட்டில், 2019 தேர்தலில் 30 இடங்கள் வென்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தற்போது கூடுதலாக 4 இடங்களைப் பெற்றுள்ளது. 2019இல் 16 இடங்களில் வென்ற காங்கிரஸ் தற்போது, 16 இடங்களை தக்கவைத்துள்ளது.

இதையும் படிக்க:
Maharashtra Election Results: எதிர்க்கட்சி அந்தஸ்து கூட.. மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி கூட்டணியின் பரிதாப நிலை!

Advertisement

கடந்தமுறை 7 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் மட்டுமே வென்ற ராஷ்டிரிய ஜனதா தளம் தற்போது 7 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களைப் பிடித்துள்ளது. ஜார்க்கண்ட்டில் 2019-இல் 25 இடங்களில் வென்ற பாஜக, தற்போது 4 தொகுதிகளை இழந்துள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version