உலகம்
West Bengal by-election: மேற்கு வங்க மாநில இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி!!
West Bengal by-election: மேற்கு வங்க மாநில இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி!!
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆறு தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலுடன் மேற்குவங்கத்தில் சித்தாய், மதாரிஹட், நைஹாட்டி, ஹரோவா, மெதினிபூர், தல்தங்கிரா ஆகிய 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், முந்தைய தேர்தலில் 5 தொகுதிகளில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியும், ஒரு தொகுதியில் பாஜக-வும் வெற்றிபெற்றிருந்தன.
மக்கள் மத்தியில் மாநில அரசுக்கு எதிரான அதிருப்தி இருப்பதாக கூறப்பட்ட சூழலில் நடைபெற்ற தேர்தலில், 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றிவாகை சூடியது. குறிப்பாக மதாரிஹட் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முதல்முறையாக வெற்றிக் கனியை ருசித்துள்ளது.
இதையும் படிக்க:
Maharashtra, Jharkhand Election Results: 2019 vs 2024 – மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ஆளுங்கட்சிகளுக்கு உயர்வா?… சரிவா?
இந்த தொகுதியில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி 12 முறையும், பாஜக இரு முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றிருந்தன.
இதையடுத்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.