உலகம்

ஆபிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோயால் 700க்கும் மேற்பட்டோர் இறப்பு!

Published

on

ஆபிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோயால் 700க்கும் மேற்பட்டோர் இறப்பு!

ஆபிரிக்க நாடுகளில்  வேகமாக பரவி வரும் குரங்கம்மை நோயினால் இதுவரை 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வாரத்தில் மாத்திரம் 107 மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில் குரங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை, டென்மார்க்கைச் சேர்ந்த, ‘பவாரியன் நார்டிக்’ எனும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்துள்ளது.

Advertisement

பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பின் உலக சுகாதார ஸ்தாபனம் குறித்த தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. (ச)
 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version