விளையாட்டு

இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: தனிப்பட்ட காரணங்களுக்காக தாயகம் திரும்பினார் கௌதம் காம்பீர்

Published

on

இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: தனிப்பட்ட காரணங்களுக்காக தாயகம் திரும்பினார் கௌதம் காம்பீர்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளரான கௌதம் காம்பீர் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பியுள்ளார். அவர் மீண்டும் டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டிக்காக, டிசம்பர் 3-ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறார். ஆங்கிலத்தில் படிக்கவும்: India coach Gautam Gambhir to fly back home because of ‘personal reasons’ “கௌதம் காம்பீர் இந்தியா செல்வதாக தெரிவித்துள்ளார். அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணியுடன் இணையவுள்ளார். அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.” என பிசிசிஐ தெரிவித்துள்ளதுநாளை (நவ 27) இந்திய அணி கேன்பராவிற்கு செல்கிறது. காம்பீர் இல்லாத நேரத்தில் துணை பயிற்சியாளர்களான அபிஷேக் நாயர், ரையான், மோர்னே மோர்கல் மற்றும் திலிப் ஆகியோர் இந்திய அணிக்கு ஆலோசனை வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ரோகித் ஷர்மாவிற்கு குழந்தை பிறந்ததால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியத சூழல் ஏற்பட்ட நிலையில், தற்போது அவர் இந்திய அணியுடன் இணைந்துள்ளார். “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version