தொழில்நுட்பம்

இன்ஸ்டாகிராம் முடக்கம்; லாகின் செய்ய முடியாமல் பயனர்கள் தவிப்பு

Published

on

இன்ஸ்டாகிராம் முடக்கம்; லாகின் செய்ய முடியாமல் பயனர்கள் தவிப்பு

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இன்று இந்தியா மற்றும் பிற பகுதிகளில் சில மணி நேரம் இன்ஸ்டாகிராம் முடங்கியது. லாக்கிங் பிரச்சனை, ஸ்டோரி அப்லோடு செய்வதில் பிரச்சனை, மெசேஜ் அனுப்ப முடியாமலும் பயனர்கள் தவித்தனர் . ஆன்லைன் சேவை இடையூறுகளைக் கண்காணிக்கும் தளமான டவுன்டெக்டரின் கூற்றுப்படி, இன்ஸ்டாகிராம் முடங்கியதாக காலை 10:37 மணியளவில் சுமார் 700 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த வாரத்தில் 2-வது முறையாக இன்ஸ்டா செயலிழந்துள்ளது. கூடுதலாக, 42 சதவீத பயனர்கள் உள்நுழைவு சிக்கல்களையும், 39 சதவீதம் பேர் சர்வர் இணைப்பு சிக்கல்களையும், 19 சதவீதம் பேர் பொதுவான பயன்பாட்டு சிக்கல்களையும் எதிர்கொண்டதாக கூறினர். இருப்பினும் சில மணி நேரங்களில் பிரச்சனை சரி செய்யப்பட்டது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version