விநோதம்

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் காரமான உணவுகள்!!

Published

on

Loading

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் காரமான உணவுகள்!!

(இன்று ஒரு தகவல்)

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் காரம் அதிகமாகவே இருக்கும். மேலும் இந்திய மசாலாப் பொருட்களுக்கு எப்பொழுதும் தனி இடமும் உண்டு. குறிப்பாக தமிழகம், ஆந்திரா போன்ற பகுதிகளில் காரம் அதிகமாக உணவுகளில் சேர்க்கப்படுகின்றது. 
காரமான உணவுகள் அதிகம் சாப்பிட்டு வந்தால், பல உடல் நலப்பாதிப்புகளை சந்திக்க நேரிடும். மிளகாயில் உள்ள கேப்சைசின் என்ற தனிமம் நமக்கு காரமாக உணர்வை தருகிறது.  இந்த தனிமம் மிளகாயில் அதிக அளவு இருப்பதால், மிளகாய் அதிக காரமாக உள்ளது.  அதிக அளவு கேப்சைசின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதிக காரமான உணவை சாப்பிட்டால், உடலில் என்ன என்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
காரமான உணவுகளை அதிகமாக சாப்பிட்டு வந்தால், அதிக காய்ச்சல், மயக்கம், மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்படுவதுடன், செரிமான அமைப்பும் பாதிக்கப்பட்டு வயிறு எரிச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும். இந்த பாதிப்புகள் சில நேரங்களில் விரைவில் சரியாகிவிடும், ஆனால் ஒருசில நேரங்களில் இது கடுமையான பாதிப்பையும் ஏற்படுத்தும். மேலும் உடம்பில் வேர்வையை அதிகரிக்கச் செய்வதுடன், வாயில் கொப்புளங்களும், வெடிப்புகளும் ஏற்படும்.  மன அழுத்தமும் அதிகரிக்கும். காரமான உணவுகளை வயதானவர்கள், வயிறு தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், குழந்தைகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். காரமான உணவினை சாப்பிட வேண்டும் என்றால், அதனுடன் கூடுதலாக ஏதேனும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக காரமான உணவுடன் தயிர் அல்லது பால் சேர்த்து சாப்பிடலாம். பால் அல்லது தயிர் உடலில் காரத்தின் விளைவை குறைக்கும்.
சாப்பிட்ட பிறகு வயிற்று பகுதியில் எரியும் உணர்வு இருந்தால் கூலிங்கான நீரை குடியுங்கள்.(ப)      
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version