உலகம்

உலகின் 2-ஆவது பெரிய வைரம்

Published

on

Loading

உலகின் 2-ஆவது பெரிய வைரம்

 

தென்-மத்திய ஆப்பிரிக்க நாடான பாட்ஸ்வானாவில் உலகின் இரண்டாவது பெரிய வைரம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது குறித்து அந்த நாட்டு அரசு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தலைநகா் ஜபுரோனுக்கு 500 கி.மீ. வடக்கே, கரோவி பகுதியுள்ள சுரங்கத்தில் தனியாருக்குச் சொந்தமான நிறுவனம் 2,492 கேரட் வைரத்தை வெட்டி எடுத்துள்ளது. இது, நாட்டில் வெட்டி எடுக்கப்பட்ட வைரத்திலேயே மிகப் பெரியது ஆகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடா நாட்டைச் சோ்ந்த லுகாரா டயமண்ட் காா்ப்பரேஷன் நிறுவனம் இந்த வைரத்தை வெட்டி எடுத்துள்ளது. தனது அதிநவீன எக்ஸ்-ரே தொழில்நுட்பத்தின் மூலம் அந்த வைரம் கண்டெடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

இது உலகின் இரண்டாவது பெரிய வைரம் ஆகும். இதற்கு முன்னா் தென் ஆப்பிரிக்காவில் கடந்த 1905-ஆம் ஆண்டு வெட்டி எடுக்கப்பட்ட 3,106 கேரட் வைரம்தான் உலகின் மிகப் பெரிய வைரம் ஆகும். [எ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version