இலங்கை

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சைக்கிள் ஓட்ட போட்டி!

Published

on

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சைக்கிள் ஓட்ட போட்டி!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பிரதேச சபையால் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு சைக்கிள் ஓட்டப்போட்டி இன்று நடாத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை மந்திகையில் அமைந்துள்ள பருத்தித்துறை பிரதேச சபை முன்றலிலிருந்து ஆரம்பமான சைக்கிள் ஓட்டப்போட்டி வடமராட்சி கிழக்கு குடாரப்பில் நிறைவடைந்தது.

Advertisement

பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட சன சமூக நிலையங்குக்கு இடையில் நடாத்தப்பட்ட இப் போட்டியில் எட்டு சன சமூக நிலையங்கள பங்குபற்றியிருந்தன.

இதில் முதலாமிடத்தினை கற்கோவளம் சனசமூக நிலையத்தை சேர்ந்த T. சிவகரனும், இரண்டாம் இடத்தினை நாகர்கோவில் தெற்கு தரவை சன சமூக நிலையத்தை சேர்ந்த K.சிவகரனும், மூன்றாம்  இடத்தினை தொண்டமனாறு கலையரசி சன சமூக நிலையத்தை சேர்ந்த ப.டினோஜனும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

பருத்தித்துறை பிரதேச சபை செயலர் தலமையில் இடம் பெற்ற குறித்த சைக்கிளோட்ட போட்டியில் பருத்தித்துறை போலீசார் பாதுக்பாபினையும், பருத்தித்துறை ஆதார மருத்துவமனை நோயாளர் காவு வண்டி வசதியையும் வழங்கியிருந்தனர்.  (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version