உலகம்

எரிபொருள் ஏற்றிச்சென்ற லொறி விபத்து!

Published

on

எரிபொருள் ஏற்றிச்சென்ற லொறி விபத்து!

மேற்கு ஆபிரிக்கா, நைஜீரியா நாட்டின் நைஜர் மாகாணம், அகெயி நகர் வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் ஏற்றிக்கொண்டு லொறியொன்று சென்றுள்ளது.

அச்சமயம் வீதியின் எதிரே வேகமாக வந்த மற்றுமொரு லொறி எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறிமீது மோதியுள்ளது.

Advertisement

இவ் விபத்து ஏற்பட்டதில் இரு லொறிகளும் வெடித்துச் சிதறியுள்ளன.

சம்பவத்தில் 48 பேர் உயிரிழந்ததோடு, 50க்கும் அதிகமானோர் படு காயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், மீட்புக் குழுவினர், பொலிஸார் அனைவரும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisement

விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.[ ஒ ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version