விளையாட்டு
ஐ.பி.எல் ஏலம்: உள்வாங்கப்பட்ட ஏழு இலங்கை வீரர்கள்!
ஐ.பி.எல் ஏலம்: உள்வாங்கப்பட்ட ஏழு இலங்கை வீரர்கள்!
இம்முறை இடம்பெற்றவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இலங்கை வீரர்கள் 07பேர் விளையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில் 6 இலங்கை வீரர்கள் வாங்கப்பட்ட நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, மத்தீஷ பத்திரனவை தமது அணியில் தக்கவைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளது.
வனிந்து ஹசரங்க மற்றும் மஹிஷ் தீக்ஷன ஆகியோர் நேற்று முன்தினம் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளதுடன் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜெட்டா நகரில் நேற்று நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் மேலும் நான்கு இலங்கை வீரர்கள் இவ்வருட ஐ.பி.எல் போட்டிக்கான அணிகளால் வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி, நுவான் துஷாரவை பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியும், கமிந்து மெண்டிஸை சன்ரைஸ் ஹைதராபாத் அணியும் வாங்கியுள்ளதுடன்
துஷ்மந்த சமீரவை டெல்லி கப்பிடல்ஸ் அணியும், புதிய வீரரான எஷான் மலிங்கவை சன்ரைஸ் ஹைதராபாத் அணியும் வாங்கியுள்ளன. (ச)