இலங்கை

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – கிளிநொச்சியில் இன்று ஊடக சந்திப்பு!

Published

on

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – கிளிநொச்சியில் இன்று ஊடக சந்திப்பு!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சியில் இன்று ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

Advertisement

ஜனாதிபதி அனுரகுமார திச நாயக்கா புதிய அரசியல் அமைப்பை கொண்டு வருவதாக அறிவித்துள்ளார்.

அந்த அரசியல் அமைப்பு 2015 நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற மைத்திரி பால சிறிசேன ரணில் கொண்டு வந்த இடைக்கால அறிக்கையை கொண்டு வரும் திட்டம் இருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அந்த திட்டத்தில் தெளிவாக இந்த அரசியலைப்பானது ஒற்றையாட்சி என்பதை குறிப்பிடுகின்றது. 2017முதல் நாங்கள் தெளிவாக மக்களுக்கு சொல்லி வருகின்றோம் 

Advertisement

வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதில் 16பேர் தமிழ்த்தேசிய கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் .16பேரும் இடைக்கால அரசியல் அமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள்.

ஒற்றையாட்சி முறையை 2015ல் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து இருப்பது என்பது இனத்திற்கு ஒரு சாபக்கேடு 

2015ல் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீண்டும் இந்த நாடாளுமன்றிலும் தெரிவு செய்யப்படுவார்களானால் அறுதி பெரும்பாண்மையுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புன் நிறைவேற்றப்பட்டதாக ஜனாதிபதி காட்டிக்கொள்வார்.

Advertisement

தமிழர் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் செயற்பாட்டுக்கு தமிழரசுக்கட்சி சொல்கின்றது சமஸ்டிஜை வலியுறுத்தி வந்த கட்சி குறித்த அரசியலைப்பில் சமஷ்டி இல்லை என்பதை மக்கள் மத்தியில் மூடி மறைப்பதற்கு பெயர்ப்பலகை முக்கியம் இல்லை உள்ளடக்கம் தான் தேவை என்கிறார்கள். இப்படி சொல்பவர்கள் சாதாரண ஆட்கள் இல்லை ஜனாதிபதி சட்டத்தரணி என்று சொல்பவர்களே 

தமிழரசுக்கட்சி இந்த அரசியலமைப்பை தாம் தான் தயாரித்தது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். இந்த வரலாற்று துரோகங்களை செய்தவர்களில் சம்மந்தன், சுமந்திரன், சித்தார்த்தன் 

சுமந்திரனின் செயற்பாட்டை விடுதலைப்புலிகளின் தத்துவ ஆசிரியராக இருக்கக்கூடிய அன்ரன் பாலசிங்கத்திற்கு ஒப்பிட்ட சிறீதரன் கடந்த காலங்களில் நியாயப்படுத்தி இருக்கின்றார். என்றார்.  (ப)

Advertisement

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version