உலகம்

கல்வித்துறை செயலாளராக லிண்டா மெக்மஹோன்!

Published

on

கல்வித்துறை செயலாளராக லிண்டா மெக்மஹோன்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், ஒவ்வாரு துறைக்கும் அதிகாரிகளை நியமித்து வருகிறார் . இந்த நிலையில் கல்வித்துறை செயலாளராக கோடீஸ்வர மல்யுத்த பெண்மணி லிண்டா மெக்மஹோனை பரிந்துரை செய்துள்ளார்.

மெக்மஹோன் கடந்த டொனால்டு டிரம்ப் ஆட்சி காலத்தில் 2017 முதல் 2019 வரை சிறு வணிக நிர்வாகத்தை வழிநடத்தினார். இரண்டு முறை குடியரசு கட்சி சார்பில் கனெக்கடிகட்ல் இருந்து செனட்டிற்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

Advertisement

2009-ல் இருந்து கனெக்டிக்கட் கல்வி வாரியத்தில் பல வருடங்கள் பணிபுரிந்துள்ளார். பல்கலைக்கழக அறக்கட்டளை குழுவிலும்  பணியாற்றியுள்ளார்.

அமெரிக்காவின் கல்வித்துறை செயலாளராக பரிந்துரை செய்யப்பட்டாலும், கல்வி வட்டாரங்களில் தெரியாத முகமாகவே காணப்படுகிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version