உலகம்

காஸா: நிவாரணப் பொருட்கள் கொள்ளை!

Published

on

Loading

காஸா: நிவாரணப் பொருட்கள் கொள்ளை!

காஸாவில் நிவாரணப் பொருள்களை ஏற்றி வந்த சுமாா் 100 லாரிகளை ஆயுதம் ஏந்திய கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.

அந்தப் பகுதியில் கடந்த ஆண்டு ஒக். 7-ஆம் திகதி முதல் நடைபெற்றுவரும் போரால் அங்கு கடுமையான உணவுப் பொருள் பஞ்சம் நிலவிவருகிறது. ஹமாஸை ஒடுக்குவதற்காக காஸாவை இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ளதால் சா்வதேச நாடுகள் அந்தப் பகுதிக்கு போதுமான அத்தியாவசியப் பொருள்களை அனுப்ப முடியாத நிலை உள்ளது.

Advertisement

இந்தச் சூழலில், மத்திய காஸா பகுதிக்கு உணவுப் பொருள்களை ஏற்றிச் சென்ற சுமாா் 100 லாரிகளை ஆயுதம் ஏந்திய கும்பல் சுற்றிவளைத்து, அதிலிருந்த பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றதாக ஐ.நா. தெரிவித்தது.

போா் காரணமாக பெரும்பாலான மக்கள் புலம் பெயா்ந்துள்ள மத்திய காஸாவில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் உணவுப் பற்றாக்குறை நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது.

இந்தத் தகவலை வெளியிட்ட ஐ.நா. கொள்ளையில் ஈடுபட்டது யாா் என்ற விவரத்தை வெளியிடவில்லை. இருந்தாலும், ஐ.நா. செய்தித் தொடா்பாளா் ஸ்டெஃபானே துஜாரிக் கூறுகையில், உணவுப் பருள்களை ஏற்றி வந்த 109 லாரிகளை வழக்கமான பாதைக்குப் பதிலாக, அறிமுகம் இல்லாத மாற்றுப் பாதையில் செலுத்துமாறு இஸ்ரேல் ராணுவத்தினா் உத்தரவிட்டதாகக் கூறினாா்.

Advertisement

ஏற்கெனவே, காஸாவுக்குள் அனுப்பப்படும் பொருள்களை ஹமாஸ் அமைப்பினா் திருடுவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டுவதும், அதனை அந்த அமைப்பினா் மறுத்துவருவதும் நினைவுகூரத்தக்கது.

காஸா உயிரிழப்பு 43,972: காஸாவில் இஸ்ரேல் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் மேலும் 50 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இத்துடன், அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் சுமாா் 13 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 43,972-ஆகவும் காயமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,04,008-ஆகவும் அதிகரித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version