இலங்கை

சந்நிதியான் ஆச்சிரமத்தால்  வெள்ள நிவாரண உதவிகள் கல்லுண்டாய் மக்களுக்கு  உதவிகள்!

Published

on

சந்நிதியான் ஆச்சிரமத்தால்  வெள்ள நிவாரண உதவிகள் கல்லுண்டாய் மக்களுக்கு  உதவிகள்!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கடும் மழை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கல்லுண்டாய் ஜே/135, ஜே/136, பிரிவில் வசிக்கும் 59 குடும்பங்களுக்கு 2லட்சத்து 95ஆயிரம் ரூபா பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் கல்லுண்டாயை சேர்ந்த தரம்  7இல் கல்வி கற்கும் மாணவனுக்கு 45ஆயிரம் ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டி ஒன்றும்  வழங்கிவைக்கப்பட்டது.

கல்லுண்டாய் ஐக்கிய சனசமூக நிலைய தலைவர் க.செந்தூரன் தலைமையில் நேற்று முன்தினம்  சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இவ் உதவிகள் வழங்கும் நிகழ்வில்  சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் உதவிகளை வழங்கிவைத்தார். (ச)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version