விளையாட்டு
சிங்கப்பூரில் தொடங்கியது உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்! தமிழ்நாட்டின் குகேஷ் – சீனாவின் டிங் லிரேன் பலப்பரீட்சை!
சிங்கப்பூரில் தொடங்கியது உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்! தமிழ்நாட்டின் குகேஷ் – சீனாவின் டிங் லிரேன் பலப்பரீட்சை!
குகேஷ், டிங்
138 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கண்டத்தை சேர்ந்த வீரர்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் எதிரெதிரே மோதுகின்றனர். இன்று (நவம்பர் 25) தொடங்கி டிசம்பர் 14ஆம் தேதி வரை மொத்தம் 14 சுற்றுகளாக போட்டிகள் கிளாசிக்கல் முறையில் நடைபெறுகிறது.
முதல் 40 நகர்த்தல்களுக்கு 120 நிமிடங்கள் வழங்கப்படும். 41வது நகர்த்தலில் இருந்து அரைமணி நேரம் கொடுக்கப்படும். ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 30வினாடிகள் கூடுதலாக கொடுக்கப்படும். போட்டி விதிகளின் படி 41வது நகர்த்தலுக்கு முன்பாக ஆட்டத்தை டிராவில் முடித்துக்கொள்ள முடியாது. முதல் சுற்றில் தமிழ்நாட்டின் குகேஷ் வெள்ளை நிறக்காய்களுடனும்- சீனாவின் டிங் லிரேன் கருப்பு நிற காய்களுடனும் விளையாடுகின்றனர்.
போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி நண்பகல் 2.30மணிக்கு தொடங்கியது. முதலில் 7.5புள்ளிகளை பெறும் வீரர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வார்; பட்டம் வெல்லும் வீரருக்கு 21கோடி ரூபாய் பரிசு. ஒரு வேளை 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டி சமனில் முடிந்தால், டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்படும்.
5 முறை உலக செஸ் சாம்பியனான தமிழ்நாட்டின் விஸ்வநாதன் ஆனந்த்-க்கு பிறகு அவரது மாணவர் இந்த இடத்தை பிடிப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.