டி.வி
சின்னத்திரையில் நாயகனாக நடிக்கும் சினேகன்!
சின்னத்திரையில் நாயகனாக நடிக்கும் சினேகன்!
சின்னத்திரையில் பாடலாசிரியர் சினேகன் நடிக்கும் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரான சினேகன், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
புத்தம்புது பூவே படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான சினேகன், ஆட்டோகிராஃப் படத்தில் இடம் பெற்றிருந்த ஞாபகம் வருதே மற்றும் ராம் படத்தில் இடம் பெற்றிருந்த ஆராரிராரோ பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
சினிமாவில் யோகி படத்தின் மூலம் நடிப்புப் பயணத்தை தொடங்கிய சினேகன், சின்னத்திரையில் சில தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரான பவித்ரா தொடரில் நாயகனாக நடிக்கிறார் சினேகன். இத்தொடரில் பிரதானப் பாத்திரத்தில் பிக் பாஸ் பிரபலம் அனிதா சம்பத் நடிக்கிறார்.