இலங்கை

சீரற்ற காலநிலை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published

on

சீரற்ற காலநிலை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்பொழுது தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு தெரிவித்தார் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் டிஎன் சூரியராஜா. 

Advertisement

நேற்று முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தாழ்நிலைப் பிரதேசங்கள் மற்றும் கரையோர பிரதேசங்களை அண்டி வாழும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த சீரற்ற காலநிலை காரணமாக, 12 பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்பு உணரப்பட்டுள்ளது

.சாவகச்சேரி, ஊர் காவல்துறை, உடுவில், கோப்பாய் சண்டிலி பாய், யாழ்ப்பாணம், நல்லூர், பருத்தித்துறை, சங்கானை, காரை நகர், நெடுந்தீவு , தெள்ளிப்படை பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த பாதிப்பு உணரப்பட்டுள்ளது.

Advertisement

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2040 குடும்பங்களைச் சேர்ந்த 7436 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். (ப)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version