இலங்கை

சுகாதார அமைச்சர் விரைவில் யாழ் வருவார் – எம்.பி சந்திரசேகர்

Published

on

சுகாதார அமைச்சர் விரைவில் யாழ் வருவார் – எம்.பி சந்திரசேகர்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் விஜயம் மேற்கொண்டு, சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்வார் என கடற்தொழில் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

யாழ் . போதனா மருத்துவமனைக்கு நேற்றையதினம் சனிக்கிழமை நேரில் விஜயம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மருத்துவமனையின் சேவை நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார். 

Advertisement

மருத்துவமனையின் வளர்ச்சி மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான தேவைகளை மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவ கலாநிதி த. சத்தியமூர்த்தியிடம் நேரடியாக கேட்டறிந்த அவர், சாதகமான மாற்றங்களை கொண்டுவர சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி, தன்னால் முடிந்த எல்லாவற்றையும் மேற்கொள்ளவதாக உறுதி அளித்தார். 

அத்துடன்,  சுகாதார அமைச்சர் மருத்துவர் நளின்த ஜயதிஸ்ஸ விரைவில் யாழ் போதனா மருத்துவமனைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் இதன்மூலம் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version