உலகம்

தீவிரமடையும் ரஷ்யா-உக்ரைன் போர்.. “டிரோன் தாக்குதல் நடத்தினால், பதிலுக்கு அணு ஆயுத தாக்குதல்” – ரஷ்யா!

Published

on

தீவிரமடையும் ரஷ்யா-உக்ரைன் போர்.. “டிரோன் தாக்குதல் நடத்தினால், பதிலுக்கு அணு ஆயுத தாக்குதல்” – ரஷ்யா!

ரஷ்யா மீது எவ்வித தாக்குதல் நடத்தினாலும் பதிலுக்கு அணு ஆயுதங்களை பயன்படுத்தும் வகையில் புதிய கொள்கைக்கு ரஷ்யா ஒப்புதல் அளித்துள்ளது.உக்ரைன் மீது 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி ரஷ்யா தாக்குதலை தொடங்கியது. ரஷ்யா மீது உக்ரைனும் அவ்வப்போது டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் அணு ஆயுதம் இல்லாத ஒரு நாடு, அந்த பலம் பொருந்திய மற்றொரு நாட்டின் உதவியுடன் தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று ரஷ்யா தனது கொள்கையில் மாற்றம் செய்துள்ளது.Also Read: “வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும்” – பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு இங்கிலாந்து பிரதமர் உறுதிஅணு ஆயுத தாக்குதல்ரஷ்யா-உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான போர் 1,000 நாட்களை எட்டியுள்ளது. இந்நிலையில், அணு ஆயுதக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ரஷ்ய அதிபர் புடின் கையெழுத்திட்டுள்ள கொள்கையின்படி, டிரோன் தாக்குதல் நடத்தினால், ரஷ்யா பதிலுக்கு அணு ஆயுத தாக்குதல் நடத்தும் என்றும் கூறப்பட்டு உள்ளது. அமெரிக்க அளித்த சக்தி வாய்ந்த தொலைதூர ஏவுகணைகளை பயன்படுத்த அந்நாட்டு அதிபர் பைடன் உக்ரைனுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ரஷ்யா பதிலுக்கு தனது அணு ஆயுத கொள்கையை மாற்றியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version