விளையாட்டு

நின்று கலக்கும் இந்தியா

Published

on

நின்று கலக்கும் இந்தியா

அவுஸ்திரேலியாவின் பேர்த் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான போர்டர் – காவஸ்கர்  டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டியின் இரண்டாம் நாளன்று யஷஸ்வி ஜய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க, இந்தியா வலுவான நிலையை அடைந்துள்ளது.

முதலாம் நாளன்று இரண்டு அணிகளினதும் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய போதிலும் இரண்டாம் நாளன்று இந்தியாவின் 2ஆவது இன்னிங்ஸில் ஆரம்ப வீரர்கள் இருவரும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி விக்கெட்கள் விழாமல் இருப்பதை உறுதிசெய்தனர்.

Advertisement

முதலாவது இன்னிங்ஸில் 150 ஓட்டங்களுக்கு சுருண்ட இந்தியா, 2வது இன்னிங்ஸில் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 172 ஓட்டங்களைப் பெற்று 218 ஓட்டங்களால் முன்னிலை அடைந்துள்ளது.

இந்தப் போட்டியில் 2 சிக்ஸ்களை அடித்த ஜய்ஸ்வால், ஒரே வருடத்தில் அதிக சிக்ஸ்கள் அடித்த வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார்.

பேர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சொந்த மண்ணில் அந்த அணி இந்தியாவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் குறைந்த ரன்களில் ஆட்டமிழப்பது இதுவே முதன்முறையாகும்.
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version