இலங்கை

பிற்போடப்பட்ட மலர்க்கண்காட்சி!

Published

on

பிற்போடப்பட்ட மலர்க்கண்காட்சி!

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நாளை வெள்ளிக்கிழமை(22) ஆரம்பமாகவிருந்த மலர்க்கண்காட்சி புயலுடன்கூடிய மழை காரணமாகப் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து ஆண்டுதோறும் மலர்க்கண்காட்சியை சிறப்பான முறையில் நடாத்தி வந்துள்ள நிலையில் இந்த ஆண்டும் மலர்க்கண்காட்சி இம்மாதம் 22ஆம் திகதி தொடங்கி 30ஆம் திகதி வரை சங்கிலியன் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertisement

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக இக்காலப்பகுதியில் புயலுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதன் காரணமாகவே குறித்த மலர்க்கண்காட்சி பிற்போடப்பட்டுள்ளதாகவும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படுமெனவும் ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்திடம் இருந்து இலவசமாக மரக்கன்றுகளை பெற்றுக்கொள்வதற்கு ஏற்கனவே பதிவு செய்திருந்த அனைவரும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு மரக்கன்றுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version