விநோதம்

புரோட்டீன் பார் சாப்பிடலாமா..? அப்படி சாப்பிடுவதால் என்ன ஆகும்..?

Published

on

புரோட்டீன் பார் சாப்பிடலாமா..? அப்படி சாப்பிடுவதால் என்ன ஆகும்..?

உடனடியான அதே நேரத்தில் சௌகரியமான மற்றும் விரைவான ஊட்டச்சத்துக்கான மூலத்தை எதிர்பார்க்கும் நபர்களுக்கு புரோட்டீன் பார் பிரபலமான ஒரு ஸ்நாக்ஸ் ஆக அமையும். அதிலும் குறிப்பாக ஃபிட்னஸ் ஆர்வலர்கள் மற்றும் பிஸியாக இருக்கும் நபர்களுக்கு புரோடீன் பார்கள் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது. ஆரோக்கியமான ஒன்றாக சந்தைப்படுத்தப்படும் இந்த பார்களில் அத்தியாவசிய புரோட்டீன்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் குறுகிய வடிவத்தில் காணப்படுகிறது. ஆனால் தினமும் புரோட்டீன் பார் சாப்பிடுவதால் நம்முடைய உடலுக்கு என்ன ஆகும் என்பதை பற்றியும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஊட்டச்சத்து தேவை இருப்பவர்கள் அல்லது கடுமையான வேலைகள் செய்வதற்கு இடையே போதுமான ஊட்டச்சத்து எடுத்துக் கொள்ள முடியாத நபர்களுக்கு புரோட்டீன் பார் சாப்பிடுவது ஒரு எளிமையான ஆப்ஷன் ஆக இருக்கலாம். எனினும் முழு உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக தினமும் புரோட்டீன் பார்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

Advertisement

புரோட்டின் பார் தசை வளர்ச்சிக்கு உதவி, பசியை கட்டுப்படுத்தி சௌகரியமான முறையில் நமக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. ஒரு சரிவிகித உணவுக்கு கூடுதலாக கூட புரோட்டீன் பார்களை நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் புரோட்டின் பார்களை வாங்கும் பொழுது அதில் தீங்கு விளைவிக்கும் கொழுப்புகள், சர்க்கரை போன்றவை குறைவாகவும் அதே நேரத்தில் தரமான புரோட்டீன் அதிகமாகவும் உள்ளவாறு பார்த்து வாங்க வேண்டும்.

புரோட்டீன் பார்களோடு ஒப்பிடுகையில் மெலிந்த இறைச்சி, சிக்கன், மீன், முட்டை, பீன்ஸ் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. முழு உணவுகள் சரிவிகித உணவின் ஒரு பகுதியாக அமைகின்றன. ஆனால் புரோட்டீன் பார்களை தினமும் சாப்பிடுவது நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் நாள்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

Also Read |
பலன்களை அள்ளித் தரும் சீரகம்… உணவில் எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா?

Advertisement

அவற்றில் உள்ள அதிக அளவு சர்க்கரை அல்லது செயற்கை பொருட்கள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக இதனால் வகை 2 டயாபடீஸ், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்றவை ஏற்படுகிறது. அதிக அளவு சர்க்கரை சாப்பிடுவதால் இந்த பிரச்சனை உருவாகிறது. மேலும் புரோட்டீன் பார்களில் சேர்க்கப்பட்டுள்ள செயற்கை இனிப்பான்கள் மற்றும் சேர்க்கை பொருட்கள் நம்முடைய ஆரோக்கியத்தை சீர்குலைத்து, குடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

எனவே புரோட்டீன் பார்களை வாங்கும் பொழுது ஒருவர் அதனை மிகவும் கவனத்துடன் வாங்க வேண்டும். அதிலிருந்து பலன்களை பெறுவதற்கு முழு உணவு புரோட்டீன் மூலங்களால் செய்யப்பட்ட புரோட்டீன் பார்களை சாப்பிடலாம். அவற்றையும் மிதமான அளவு சாப்பிடுவது முக்கியம்.

புரோட்டீன் பார்களை வாங்கும் பொழுது லேபிள்களில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:-

Advertisement

*ஒரு சர்விங்கில் 10 முதல் 15 கிராம் புரோட்டீன் உள்ள அதிக புரோட்டின் அளவு கொண்ட பார்களை வாங்குங்கள்.

*செயற்கை சர்க்கரைகள் குறைவாக உள்ள புரோட்டீன் பார்களை தேர்வு செய்வது நல்லது. அதாவது ஒரு சர்விங்கில் 5 கிராமுக்கும் குறைவான சர்க்கரை இருக்க வேண்டும்.

*போதுமான அளவு நார்ச்சத்து கொண்ட பார்களை வாங்குங்கள். ஒரு சர்விங்கில் 3 கிராம் நார்ச்சத்து இருக்க வேண்டும்.

Advertisement

*செயற்கை இனிப்பான்கள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே எப்பொழுதும் ஸ்டீவியா போன்ற இயற்கை இனிப்பான்கள் கொண்ட பார்களை வாங்குங்கள்.

*விதைகள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கிய பார்கள் சிறந்தது.

*புரோட்டீன் பார்களின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க அதில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவும்.

Advertisement

*நீங்கள் வாங்கும் பாரில் மற்றும் முழு உணவு பொருட்கள் இருக்க வேண்டும்.

*அதிகப்படியான அடிட்டிவ் அல்லது பிரிசர்வேட்டிவ்களை தவிர்க்கவும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version