சினிமா

புஷ்பா பட ப்ரோமோஷனில் அல்லு அர்ஜுன் கலகல.!

Published

on

புஷ்பா பட ப்ரோமோஷனில் அல்லு அர்ஜுன் கலகல.!

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘புஷ்பா-2’  திரைப்படம் டிசம்பர் 5 ஆம் திகதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ரிலீசுக்கு முன்பே, ரூ.1,000 கோடி வியாபாரம் செய்திருக்கும் புஷ்பா-2 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

Advertisement

இதில், அல்லு அர்ஜூன், ரஷ்மிகா, ஸ்ரீலீலா, தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.  அப்போது, அத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘கிஸிக்’ பாடல் வெளியிடப்பட்டது. இதனை ரசிகர்கள் நடனமாடி கொண்டாடினர். குறிப்பாக, இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கலந்து கொண்டார்.

சென்னை சாய் ராம் பொறியியல் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி இரண்டரை மணிநேரம் தாமதமாகத் தொடங்கியது. மாலை ஐந்து மணிக்கு தொடங்கவிருந்த இந்த நிகழ்ச்சி, இரவு 7.30 மணியளவில் தொடங்கியது. லேட்டா தொடங்கினாலும் கலகலப்பாக பேசினார் நடிகர் அல்லு அர்ஜுன்.

ஆம், இந்த விழாவில் “தான் எவ்வளவு சாதித்தாலும், அதை தனது ஆணி வேரான தமிழ் மண்ணுக்கு சமர்பிப்பதாக” அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் தெலுங்கில் பேச சொன்ன ரசிகர்களுக்கு தமிழில் பேசிய அவர், “தமிழில் தான் பேசுவேன். தெலுங்கில் பேசமாட்டேன், எந்த ஊர் செல்கிறோமோ அந்த ஊர் மொழியில் பேசுவதுதான் மரியாதை” என தெரிவித்தார்.

Advertisement

தொடர்ந்து பேசிய அவர், “நான் ஒரு பக்கா சென்னை பையன். நான் நேஷனல், இன்டர்நேஷனல் என எங்க போனாலும் சென்றாலும் சென்னைதான் என்னோட வேர். எனக்கு சென்னையுடன் தனி தொடர்பு உள்ளது. இங்கு வரும்போது ஏற்படும் உணர்வு வேறு.

வாழ்க்கையின் முதல் 20 வருடங்களை எப்படி கழித்தீர்களோ.. மீதி வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கும். என் வாழ்க்கையின் முதல் 20 வருடங்கள் சென்னையில்தான் கழிந்தது. நான் எதைச் சாதித்தாலும் அதையெல்லாம் சென்னைக்கே அர்ப்பணிக்கிறேன்.

நான் ஒரு பக்காவான சென்னை பையன். என் நண்பர்களுடன் உக்கார்ந்து பேசும்போது லோக்கல் சென்னை பாஷையெல்லாம் பேசுவேன். இப்ப நான் இங்க இருக்க காரணமே சென்னைதான் ” எனவும் உணர்ச்சி பொங்க பேசினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version