டி.வி
மனைவியை கண்டுபிடித்த கணவன்: மருமகனை அசிங்கப்படுத்தும் மாமனார்: ஜீ தமிழ் சீரியலில் இன்று!
மனைவியை கண்டுபிடித்த கணவன்: மருமகனை அசிங்கப்படுத்தும் மாமனார்: ஜீ தமிழ் சீரியலில் இன்று!
சண்முகத்தை அவமானப்படுத்திய சௌந்தரபாண்டி.. பாண்டியம்மா திட்டத்தால் நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணியின் கல்யாண நாளை கொண்டாட இசக்கி மற்றும் பாக்கியம் சீருடன் வந்த நிலையில் இன்று குடும்பத்தினர் எல்லாரும் சந்தோசமாக இருக்கின்றனர், பரணிக்காக கொண்டு வந்த சீரை கொடுத்து ஆனந்தம் கொள்கின்றனர். அப்படியே மறுபக்கம் சௌந்தரபாண்டி மற்றும் பாண்டியம்மா காரில் வந்து கொண்டிருக்க பாண்டியம்மா சண்முகம், பரணியை ஒண்ணா சேர விட கூடாது. இவங்களை பிரிக்க என் கிட்ட ஒரு திட்டம் இருக்கு என்று சொல்கிறாள்.அதாவது பரணி இன்னும் பிள்ளை பெத்துக்கல, அவங்க அன்னோன்யமான புருஷன் பொண்டாட்டியாகவே வாழல என்று சொல்கிறாள். இதை வைத்தே அந்த சண்முகம் மீது குறையை சொல்லி பிரித்து விடலாம் என்று ஐடியா கொடுக்கிறாள். உடனே இருவரும் சண்முகம் வீட்டிற்கு வந்து சண்முகம் ஆம்பளையே இல்லை என்பது போல் பேசி காயப்படுத்துகின்றனர், சண்முகம் கோபப்பட பரணி அவனை சமாதானம் செய்கிறாள்.பிறகு சண்முகம் இதை நினைத்து வருத்தத்தில் இருக்க பரணி அவனிடம் கோபமாக அவங்க அப்படி பேச என்ன காரணம்? நாம என்ன புருஷன் பொண்டாட்டி மாதிரியா இருக்கோம் என்று ரொமான்டிக்காக பேச சண்முகம் கோபமான அதை கேட்டபடி இருக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தீபாவுடன் வந்த கார்த்திக்.. போலீஸ் பிடியில் சிக்கினாளா ஐஸ்வர்யா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபாவை மீட்டு கொண்டு வர ஐஸ்வர்யாவை தேடி போலீஸ் வந்த நிலையில் இன்று, கச்சேரி நடக்கும் இடத்திற்கு வந்த போலீஸ் ஐஸ்வர்யா துப்பாக்கியுடன் தப்பி வந்து விட்டதாக சொல்லி அதிர்ச்சி கொடுக்கின்றனர். போலீஸ் கச்சேரி நடக்கும் அரங்கம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்துகின்றனர்.மாறுவேடத்தில் இருக்கும் ஐஸ்வர்யா பொலிஸிடம் சிக்க கூடாது என இங்கும் அங்கும் ஓடி ஒளிகிறாள். இதற்கிடையில் கார்த்திக் தீபாவுடன் வந்து சேர்கிறான், தீபாவை பார்த்ததும் எல்லாரும் அவளை கட்டியணைத்து அன்பை கொட்டுகின்றனர். ஆனால் தீபா எதுவும் உணராமல் பித்து பிடித்தது போல் இருக்கிறாள்.பிறகு தீபாவை ரூமுக்கு அழைத்து செல்கின்றனர், தீபாவுக்கு தற்போது சைக்கலாஜிக்கல் ரீதியான ட்ரீட்ட்மென்ட் தான் தேவை என்பதால் கச்சேரி கெட்டப்பை பார்த்ததும் அவள் சரியாகி பாடுவாள் என்று நம்பிக்கை கொள்கின்றனர். அதன் பிறகு தீபாவை மேடைக்கு அழைத்து வந்து உட்கார வைக்கின்றனர், இப்படியானேன் நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“