விநோதம்
மார்பக புற்றுநோய் முதல் நிலை அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியுமா..? பெண்களே உஷார்..!
மார்பக புற்றுநோய் முதல் நிலை அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியுமா..? பெண்களே உஷார்..!
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் உயிர் பிழைப்பது சவாலான காரியமாக அமைகிறது. வயதான பெண்களுடன் ஒப்பிடும் பொழுது இளம்பெண்களை மார்பக புற்றுநோய் மிக மோசமாக பாதிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மார்பக புற்றுநோய் ஆனது 2020 ஆம் ஆண்டில் மட்டும் 685,000 மக்களைக் கொன்றது என்று குறிப்பிட்டுள்ளது. இதுமட்டுமின்றி வயதான ஆண்களுக்கு மார்பக புற்றுநோயின் ஆபத்து அதிகம்.
இதுவரை 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் மார்பகப் புற்றுநோய் அறிகுறிகள் அதிகம் காணப்படுகிறது. மார்பகங்களில் உள்ள செல்கள் புற்றுநோய் செல்களாக மாறி இந்த நோய் உருவாகிறது. இதை ஆரம்பத்திலே கவனிக்காமல் விட்டால் புற்றுநோய் செல்கள் உடல் முழுவதும் பரவிவிடும். அனைவருமே மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வோடு இருந்தால் எளிதில் அதனை வர விடாமல் தடுக்க முடியும்.
மார்பக கட்டி
புற்றுநோய் கட்டிகள் வழக்கமான கட்டிகள் அல்லது வீக்கம் போல தோன்றலாம். இது மார்பக பகுதியை மட்டுமல்லாமல் கழுத்து, அக்குள், நெஞ்செலும்பு மற்றும் பிற பகுதிகளையும் பாதிக்கப்படும். வழக்கத்திற்கு மாறான வளர்ச்சிகள் அல்லது வீக்கத்தை கவனிக்கும் பொழுது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இவை மார்பகப் புற்றுநோய்க்கான ஆரம்பகால அறிகுறியாக இருக்கலாம். மேலும் அனைத்து மார்பக கட்டிகளும் புற்றுநோயாக இருப்பதில்லை என்றாலும், ஏதேனும் அசாதாரணங்கள் இருப்பதை உணர்ந்தாள் உடனடியாக மருத்துவரை நாடுவது அவசியமாகும்.
நிப்பிள் தோற்றத்தில் மாற்றங்கள்:
நிப்பிள் எனப்படும் முலைக்காம்பானது உள்நோக்கி இருந்தாலோ, அதன் வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருந்தாலோ, அலட்சியமாக இருக்கக்கூடாது. ஏனெனில் இவை மார்பக புற்றுநோயின் தெளிவான ஒரு அறிகுறியாகும்.
மார்பக தோல் நிறத்தில் மாற்றங்கள்:
மார்பக தோலின் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளாகும். பளபளப்பான சருமம் உள்ளவர்களுக்கு, மார்பகத் தோல் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கலாம், அதே சமயம் கருமையான சருமம் உள்ளவர்களுக்கு சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் இருக்கலாம். இந்த மாற்றங்கள் படிப்படியாகவோ அல்லது திடீரென்றோ தோன்றலாம். இந்த மாற்றத்தை கண்டால் உடனடியாக
மருத்துவரை அணுகவும்.
Also Read |
Pregnancy Symptoms: பெண்கள் கர்ப்பமாக இருப்பதை சொல்லும் ஆரம்ப கால 10 அறிகுறிகள்… என்னென்ன தெரியுமா?
மார்பக அளவு, வடிவம் அல்லது தோற்றத்தில் மாற்றங்கள்:
மார்பகம் சமச்சீரற்ற நிலையில் இருத்தல், மார்பக வடிவத்தில் கணிசமான மாற்றம், மார்பு சிவத்தல் அல்லது குழிகள் தோன்றுதல் போன்ற அறிகுறிகளில் கவனம் செலுத்த வேண்டும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரின் உதவியை நாடவும். மார்பக அளவு, வடிவம் அல்லது தோற்றத்தில் மாற்றங்கள் ஆகியவை பல்வேறு காரணங்களுக்காக ஏற்படலாம், ஆனால் அவை மார்பக புற்றுநோயுடன் தொடர்புடையதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
மார்பக தோல் அமைப்பில் மாற்றங்கள்:
மார்பகத்தின் மேலுள்ள தோலின் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் ஆனது மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். ஆரஞ்சு தோலின் அமைப்பைப் போன்ற மாற்றங்கள், குறிப்பாக கவனிக்கத்தக்கது, எனவே உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும். கூடுதலாக, மார்பகம் சிவத்தல், மார்பகத்தில் அரிப்பு போன்றவை மார்பக புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்