இலங்கை

மாவீரர்களின் பெற்றோர்களுக்கு தீவகத்தில் இன்று மதிப்பளிப்பு!

Published

on

மாவீரர்களின் பெற்றோர்களுக்கு தீவகத்தில் இன்று மதிப்பளிப்பு!

தமிழ் தேசிய செயற்பாட்டாளர் குழுமம் மற்றும் தீவக நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தீவகம் வேலனை துறையூர் பகுதியில் மாவீரர் பெற்றோர்கள் உறவினர்கள் இன்று  மதிப்பளிக்கப்பட்டனர்

மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் வேலனை துறையூர் சந்தியில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க வேலணை ஐயானார் சனசமூக நிலைய மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு மாவீரர் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் பொதுச் சுடரேற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் மாலைகள் அணியப்பட்டு கண்ணீர் மல்க மலர் வணக்கம் செலுத்தப்பட்டது

Advertisement

மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்களை மதிப்பளிக்கும் முகமாக மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன நிகழ்வில் யாழ்ப்பாணம் தீவகப் பகுதி மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.  (ப)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version