டி.வி

மெட்டி ஒலி இயக்குநரின் புதிய தொடர் படப்பிடிப்பு தொடக்கம்!

Published

on

மெட்டி ஒலி இயக்குநரின் புதிய தொடர் படப்பிடிப்பு தொடக்கம்!

மெட்டி ஒலி இயக்குநர் திருமுருகன் இயக்கும் புதிய தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.

2002ஆம் ஆண்டு முதல் 2005 வரை ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ தொடரில் கோபி பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் திருமுருகன். இவர் இத்தொடரை இயக்கியும் இருந்தார்.

Advertisement

இவருக்கு சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பையடுத்து, தமிழ் சினிமாவிலும் தனது வெற்றியைப் பதிவு செய்தார்.

நடிகர் பரத் நடிப்பில் உருவான ‘எம்-மகன்’ திரைப்படத்தை இயக்கி, தமிழக அரசின் விருத்தைப் பெற்றார். மீண்டும் பரத்துடன் இணைந்து ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ என்ற படத்தையும் இயக்கினார்.

மெட்டி ஒலியைத் தொடர்ந்து, இவர் இயக்கிய நாதஸ்வரம், கல்யாண வீடு, தேனிலவு, குலதெய்வம் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது. இவரின் குறும்படங்கள், யூடியூப் தொடர்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version