இலங்கை

யாழ்ப்பாணம் இளைஞர்களின் முன்னுதாரணமான செயற்பாடு; பாராட்டும் மக்கள்!

Published

on

யாழ்ப்பாணம் இளைஞர்களின் முன்னுதாரணமான செயற்பாடு; பாராட்டும் மக்கள்!

யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி நாவற்காடு கரம்பைக்குறிச்சி பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் அதிகமாகப் பயன்படுத்துகின்ற பிரதான வீதியில் தாழ் நிலப் பகுதி ஒன்றில் மழை காலங்களில் அதிகளவான வெள்ளநீர் தேங்கி நிற்பதன் காரணத்தால் குறித்த வீதியினூடாக போக்குவரத்து செய்யும்  அப்பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.

இந்நிலையில் நாவற்காடு, கரம்பைக்குறிச்சி இளைஞர்கள் அதிரடி முயற்ச்சியாக தமது நிதிப்பங்களிப்புடன் குறித்த வீதியினூடாக மக்கள் சிரமப்படாது செல்லும் வகையில் வீதியினை சீர் செய்துள்ளனர்.

Advertisement

இந்த வீதிக்கான சீர் செய்யும் வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்துக்கான செலவை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சி.பிரபாகரன் பொறுப்பேற்றுள்ளார்.

இவ்வாறான செயற்பாடு அனைவருக்கும் முன்னுதாரணமானது என்பது குறிப்பிடத்தக்கது. (ச)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version