உலகம்

ரஷ்யா-உக்ரேன் போரை உலகப்போராக மாற்ற முயற்சி!

Published

on

Loading

ரஷ்யா-உக்ரேன் போரை உலகப்போராக மாற்ற முயற்சி!

ரஷ்யா – உக்ரேன் இடையிலான போரை உலகப்போராக மாற்ற  மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்கிறது’ என ரஷ்ய ஜனாதிபதி  புடின் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்யா – உக்ரேன் இடையே இடம்பெற்றுவரும் போரானது  1,000 நாட்களை கடந்து நீடித்து வருகின்றது. இந்நிலையில் உக்ரேனுக்கு பொருளாதார உதவிகள் மட்டுமின்றி, ஆயுதங்களையும் அமெரிக்கா வழங்கி வருகின்றது.

Advertisement

இப்போரில் ரஷ்யாவின் கை ஓங்குவதை தடுக்க, அந்த நாட்டுக்கு எதிராக நீண்ட துாரம் பயணித்து தாக்கும் திறன் உடைய ஏவுகணையை உக்ரேன் பயன்படுத்தலாம் என்று அமெரிக்கா சமீபத்தில் அனுமதி வழங்கியிருந்தது.

அதன்படி உக்ரேன் இராணுவமும், அமெரிக்கா மீது நீண்ட தொலைவு செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளை வீசி தாக்கியது. இதற்கு பதிலடி தரும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா முதல்முறையாக பயன்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் ”இரு நாடுகளுக்கு இடையிலான போரை உலகப்போராக மாற்ற மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்கிறது எனவும், ரஷ்யா மீது தாக்குதல் நடத்த ஏவுகணைகளை வழங்கும் நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

அத்துடன் ரஷ்யாவிற்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்தும் நாடுகளின் இராணுவ வசதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த ரஷ்யாவிற்கு உரிமை உண்டு எனவும்,  சர்வதேச பாதுகாப்பு அமைப்பை அழிப்பது ரஷ்யா அல்ல, அமெரிக்காதான் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version