வணிகம்

ரூ.1 லட்சம் மானியம்; பெண்களுக்கான ‘பிங்க் ஆட்டோ’ திட்டம்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Published

on

ரூ.1 லட்சம் மானியம்; பெண்களுக்கான ‘பிங்க் ஆட்டோ’ திட்டம்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை பெண்களுக்கான ‘பிங்க் ஆட்டோ’  திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 23-ல் இருந்து டிசம்பர் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஆட்டோ வாங்க அரசு ரூ.1 லட்சம் மானியம் வழங்குகிறது.  பொதுமக்களுக்கான பல நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக, ஜூன் மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில், சென்னையில் 250 பெண்களுக்கு மானியத்துடன் ‘பிங்க் ஆட்டோ’  திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.பெண்கள் சுயதொழிலைத் தழுவி அவர்களின் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் உயர்த்துவதை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.இதற்காக, சிஎன்ஜி/ஹைப்ரிட் ஆட்டோ ரிக்‌ஷாக்களின் மொத்த விலையில் ரூ.1 லட்சம் மானியம் பெற தகுதியான பெண்களுக்கு விண்ணப்பிக்குமாறு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.  விண்ணப்பங்களை டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள சென்னை சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். ஆட்டோவில் ஜி.பி.எஸ் அமைப்பு, மகளிர் உதவி எண் 181 இருக்கும். அதோடு அனைத்து ஆட்டோக்களும் நகர காவல்துறை கண்காணிப்பின் கீழ் செயல்படும். இந்த திட்டத்தில்  25 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக,  ஓட்டுநர் உரிமத்துடன் சென்னையில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்பதாகும். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version