விளையாட்டு

ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 6.5 கோடி… 3150% அசுர வளர்ச்சி: தேஷ்பாண்டேவுக்கு பெரிய டிமாண்ட் ஏன்?

Published

on

ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 6.5 கோடி… 3150% அசுர வளர்ச்சி: தேஷ்பாண்டேவுக்கு பெரிய டிமாண்ட் ஏன்?

ஐ.பி.எல். 2025 மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கிய நடைபெற்று வரும் இந்த ஏலத்தில், 2-வது நாளான இன்று சில முன்னணி  வெளிநாட்டு வீரர்கள் குறைவான விலைக்கு வாங்கப்பட்டனர். குறிப்பாக, இங்கிலாந்து ஆல்ரவுண்டர் வீரர் சாம் கரன். அவரை கடந்த சீசனில் ரூ. 18.5 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கிய நிலையில், தற்போது வெறும் ரூ. 2.40 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கி இருக்கிறது. அதேநேரத்தில், சில முன்னணி  வீரர்களை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. ரஹானே, ஷர்துல் தாக்கூர், மயங் அகர்வால், டேரில் மிட்சல், கேன் வில்லியம்சன் உள்ளிட்டோர் முதல் சுற்றில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. அசுர வளர்ச்சிஇந்த நிலையில், கடந்த 2022  சீசனில் ரூ. 20 லட்சம் ஊதியமாக பெற்ற துஷார் தேஷ்பாண்டேவை, தற்போதைய ஏலத்தில் ரூ. 6.5 கோடிக்கு வாங்கியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். கடந்த மூன்று சீசன்களாக அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடினார். தற்போது அவரை ரூ. 6.5 கோடி எனும் இமாலய விலைக்கு வாங்கி இருக்கிறது ராஜஸ்தான். இதன் மூலம் 3150 சதவீதம் என்கிற அசுர வளர்ச்சியை அடைந்திருக்கிறார். தேஷ்பாண்டேவை சென்னை அணி கடந்த 2022  சீசனில் அடிப்படை விலை ரூ. 20 லட்சத்துக்கு வாங்கியது. அந்த  அணிக்காக கடந்த  3 சீசன்களாக ஆடிய அவர், தனது சிறப்பான  பவுலிங் திறனை வெளிப்படுத்தினார். குறிப்பாக, ஆரம்ப மற்றும் இறுதி ஓவர்களில் அற்புதமாக பந்து வீசி அசத்தினார். தேஷ்பாண்டே 36 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 9.65 என்கிற எக்கனாமியில் 42 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த பிப்ரவரியில் நடந்த  ரஞ்சி கோப்பை போட்டியில்  மும்பை அணிக்காக சதம் அடித்து மிரட்டி  இருந்தார். அதனால், ராஜஸ்தான் அணியின் முக்கிய வீரராக இருப்பார் என எதிர்பார்க்கலாம். 2022 இல் சென்னை அணியில் சேர்வதற்கு முன்பு, துஷார் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்தார். மேலும் 2016-2020-க்கு இடையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தார். இந்திய டி20 அணியில் இடம்  பெற்று அவர் 2 போட்டிகளில் ஆடியிருக்கிறார்  என்பதும் குறிப்பித்தக்கது.𝘙𝘶𝘬𝘦𝘨𝘢 𝘯𝘢𝘩𝘪… 💗🔥 pic.twitter.com/viekkhAnxP“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version