உலகம்

வடகொரியாவுக்கு 70க்கும் மேற்பட்ட விலங்குகளை பரிசாக வழங்கிய ரஷ்யா!

Published

on

வடகொரியாவுக்கு 70க்கும் மேற்பட்ட விலங்குகளை பரிசாக வழங்கிய ரஷ்யா!

வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவிற்கு ஆப்பிரிக்க சிங்கம், இரண்டு பழுப்பு நிறக் கரடிகள் உட்பட 70க்கும் மேற்பட்ட விலங்குகளை ரஷ்யா பரிசாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொஸ்கோவுக்கும் பியோங்யாங்கிற்கும் இடையிலான உறவின் அண்மைய முன்னேற்றகர நிகழ்வாக இது அமைந்துள்ளது.

Advertisement

ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தலைமையிலான ரஷ்ய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் அலெக்சாண்டர் கோஸ்லோவ், சரக்கு விமானத்தில் வட கொரிய தலைநகருக்கு விலங்குகளை கொண்டு வந்தார் என்று கோஸ்லோவின் அலுவலகம் நேற்று அதன் உத்தியோகபூர்வ டெலிகிராமில் தெரிவித்துள்ளது.

உக்ரேனில் ரஷ்யாவுடன் இணைந்து போரிட வட கொரியா ஆயிரக்கணக்கான படையினரை அனுப்பியதை அமெரிக்காவும் தென் கொரியாவும் வெளிப்படுத்திய சில வாரங்களுக்குப் பின்னர் இப்பரிசு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version