இலங்கை

விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சாவு!

Published

on

Loading

விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சாவு!

கடந்த 11ஆம் திகதி குறித்த நபர் வேரவில் பகுதியில் இருந்து முழங்காவில் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார். இதன்போது முழங்காவில் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மஞ்சள் கோட்டின் ஊடாக வலது பக்கம் திருப்ப முற்பட்ட வேளை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தார்.

இந்நிலையில்  முழங்காவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நள்ளிரவு 12 மணி அளவில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று (18) மாலை உயிரிழந்துள்ளார்.

Advertisement

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  (ப)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version