இலங்கை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்த கடற்றொழில் அமைச்சர்!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்த கடற்றொழில் அமைச்சர்!
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினார்.
அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரனும் சென்றிருந்தார்.
இன்று காலை யாழ்ப்பாணம் – ஜே – 133 கிராம உத்தியோகத்தர் பிரிவு, காக்கைதீவு பகுதிக்கு சென்ற அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டதுடன், அங்கு வீதி ஓரங்களில் வீசப்பட்டுள்ள குப்பைகளையும் பார்வையிட்டு பிரதேச மக்களிடம் அது தொடர்பில் கலந்துரையாடினார். (ப)