உலகம்

$100,000 டொலர்களை நெருங்கும் பிட்கொயின் பெறுமதி!

Published

on

$100,000 டொலர்களை நெருங்கும் பிட்கொயின் பெறுமதி!

உலகின் மிகவும் பிரபலமான மின்னியல் நாணயமான பிட்கொயின் (Bitcoin) பெறுமதி வியாழன் (22) அன்று 100,000 அமெரிக்க டொலர்களை நெருங்கியது.

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நவம்பர் 5 அன்று டொனால்ட் ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து பிட்கொயின் பெறுமதி உயர்வு கண்டுள்ளது.

Advertisement

அந்த வியாழக்கிழமை உலகின் முன்னணி மின்னியல் நாணயமான பிட்கொயின் 99,300 அமெரிக்க டொலர்களை எட்டியது.

ஆசிய வர்த்தக நேரங்களின்படி, பிட்கொயின் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 4% அதிகரித்து $99,314.95 இல் வர்த்தகமானது.

அதன் சந்தை மூலதனமும் $1.97 டிரில்லியனாக உயர்ந்துள்ளது.

Advertisement

அமெரிக்க தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து பிட்கொயின் பெறுமதி 48% க்கு மேல் உயர்ந்துள்ளது.

மின்னியல் நாணயங்களுக்கான ட்ரம்பின் ஆதரவு, எலோன் மஸ்க் போன்ற உயர்மட்ட நபர்களின் ஆதரவுடன் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version