விநோதம்
1,9,5 போன்ற இலக்கங்களில் பிறந்தவர்கள் மற்றவர்களை ஈர்க்கக்கூடியவர்களா
1,9,5 போன்ற இலக்கங்களில் பிறந்தவர்கள் மற்றவர்களை ஈர்க்கக்கூடியவர்களா
(இன்று ஒரு தகவல்)
நியூமெராலஜி படி நாம் பிறந்த திகதிகளை வைத்து நாம் எப்படிபட்டவராக இருப்போம் என்பதை ஓரளவில் கணிக்க முடியும் என நம்பப்படுகிறது.
சில திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை ஈர்க்கும் சக்தியை தானாகவே கொண்டுள்ளனர்
9,18,27 போன்ற திகதிகளில் பிறந்தவர்கள் அன்பாகவும், வேடிக்கையாகவும் செயல்படுவார்கள்.
மற்றவர்களை சிரிக்க வைக்க நிறைய நகைச்சுவைகளையும், குறும்புகளையும் கையாளுவார்கள். ஒரு பிரச்சனை வந்தால் அதை நகைச்சுவையாக சரி செய்வார்கள். அவர்களின் சுறுசுறுப்பான இயல்பால் மற்றவர்களால் அதிகம் விரும்பப்படுவார்கள்.
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் தைரியசாலிகளாக இருப்பார்கள்.புதுமை மாற்றத்தை அதிகம் விரும்புகிறவர்களாக திகழ்வார்கள். இந்த பண்புகள் தான் மற்றவர்களை எளிதாக ஈர்க்க இவர்களிடத்தில் காணப்படுகின்றன.
1,10,19,28 போன்ற திகதிகளில் பிறந்தவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக தான் இருப்பார்கள். இவர்கள் மிகவும் அர்ப்பணிப்புள்ள கலைஞர்களாக திகழ்வார்கள்.சூழ்நிலைக்கு ஏற்றவாறு புத்திசாலித்தனமாக திகழ்வதால் மற்றவர்கள் இவர்களை அதிகம் விரும்புவார்கள்.(ப)