விளையாட்டு

3 வருட ஐபிஎல் தொடர்களுக்கான திகதிகள் அறிவிப்பு

Published

on

3 வருட ஐபிஎல் தொடர்களுக்கான திகதிகள் அறிவிப்பு

உலகின் மிகவும் கவர்ச்சிகரமான ஃபிரான்சைஸ் கிரிக்கெட் லீக்காக கருதப்படும் இந்தியன் பிரீமியர் லீக், 2025 உட்பட அடுத்த மூன்று IPL லீக்’களுக்கான  திகதிகளை அறிவித்துள்ளது.

மூன்று கட்ட ஐ.பி.எல் அட்டவணை அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை.

Advertisement

அதன்படி, எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்கான போட்டிகள் மார்ச் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இறுதிப் போட்டி மே 25ஆம் திகதி நடைபெறவுள்ளது.

2026 சீசனை மார்ச் 15 முதல் மே 31 வரையிலும், 2027 சீசனை மார்ச் 14 முதல் மே 30 வரையிலும் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளின் எண்ணிக்கையை விட எதிர்வரும் இரண்டு கட்டங்களில் போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான போட்டிகளின் எண்ணிக்கை 84 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2027 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 94 போட்டிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும் இவ்வருடம் நடைபெற்ற போட்டியில் 74 போட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version