வணிகம்

Gold Price: தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. 2025-ல் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

Published

on

Gold Price: தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. 2025-ல் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை மீண்டும் உச்சத்தை தொட்டு வரும் நிலையில், 2025ஆம் ஆண்டு தங்கம் விலை எப்படி இருக்கும் என Goldman Sachs நிறுவனம் கூறியுள்ளது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.

பெண்கள் மத்தியில் தற்போது பரபரப்பாக பேசப்படுவது தங்கம் விலை பற்றி தான். கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறது. இந்நிலையில், வரும் காலங்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயருமா? அல்லது குறையுமா? என்பது குறித்து மக்களிடையே விவாதங்கள் நடந்து வருகின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இதனால் நடுத்தர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், கடந்து சில நாட்களாக மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

Advertisement

இதற்கிடையே Goldman Sachs-ன் கணிப்பு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகி உள்ளது. அது என்னவென்றால், அடுத்த ஆண்டு தங்கத்தின் விலை என்னவாக இருக்கும் என்று Goldman Sachs கணித்துள்ளது. அதன்படி, 2025ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயரும் என்று கூறப்படுகிறது. Goldman Sachs என்பது உலகளாவிய முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனமாகும்.

Also Read: Ola Layoffs: மறுசீரமைப்பு நடவடிக்கை.. 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஓலா நிறுவனம்?

ரூ.1 லட்சத்தை எட்டும் தங்கம்?

Advertisement

டிசம்பர் 2025ஆம் ஆண்டுக்குள், சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் (31.10 கிராம்) தங்கத்தின் விலை 3,000 டாலர்களை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதில் காட்டும் ஆர்வத்தின் அடிப்படையில் இந்த மதிப்பீடு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய வங்கியின் தங்கம் கொள்முதல் மற்றும் அமெரிக்காவில் வட்டி விகிதக் குறைப்பு போன்ற காரணங்களால், அடுத்தாண்டு தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை எட்டலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. Goldman Sachs அறிக்கையின்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை டிசம்பர் 2025ஆம் ஆண்டுக்குள் 3 ஆயிரம் டாலர்களை எட்டும். அதன்படி இந்தியாவில் தங்கத்தின் விலை ரூ.1 லட்சமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Also Read:
அமெரிக்கா, இங்கிலாந்து அல்ல! உலகிலேயே மிக விலையுயர்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடு எது? அதன் விலை தெரியுமா?

தங்கம் விலை ஏன் உயரும்?

Advertisement

Goldman Sachs அறிக்கையின்படி, டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளால் தங்கம் விலை குறைந்துள்ளது. ஆனால் இந்த சரிவு நீண்ட காலம் நீடிக்காது. இதற்கு முக்கிய காரணம் வர்த்தக உலகில் ஏற்படும் ஏற்ற இறக்கம் ஆகும். மேலும், அமெரிக்காவின் பொருளாதார நிலை குறித்த கவலைகளும் அதிகரித்து வருகின்றன. ஆகையால், அடுத்த ஆண்டு தங்கம் விலை பெரிய அளவில் எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த ஆண்டு முழுவதும் தங்கம் விலை தொடர்ந்து உயரும் என்று Goldman Sachs தெரிவித்துள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version