விளையாட்டு
IPL Auction 2025 : ரூ. 3.40 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்ட இளம் பவுலர்… யார் இந்த அன்ஷுல் கம்போஜ்?
IPL Auction 2025 : ரூ. 3.40 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்ட இளம் பவுலர்… யார் இந்த அன்ஷுல் கம்போஜ்?
அன்ஷுல் கம்போஜ்
ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 23 வயதாகும் இளம் பவுலர் அன்ஷுல் கம்போஜ் ரூ. 3.40 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். அவரை வாங்க மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே கடும் போட்டி காணப்பட்ட நிலையில், இறுதியாக சென்னை அணி கம்போஜை கைப்பற்றியது.
வலது கை மித வேகப்பந்து வீச்சாளரான அன்ஷுல் கம்போஜுக்கு அடிப்படை விலையாக ரூ. 30 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் ஏலத் தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு கடும் போட்டிக்கு மத்தியில் அவரை சென்னை அணி ரூ. 3.40 கோடிக்கு வாங்கியது.
சமீபத்தில் ரஞ்சி கோப்பை தொடரில் நடைபெற்ற இன்னிங்ஸ் ஒன்றில் அன்ஷுல் கம்போஜ் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி பலரது கவனத்தை ஈர்த்தார். கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அன்ஷுல் கம்போஜ் சேர்க்கப்பட்டார். சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அவரை தக்கவைத்துக்கொள்ளும் அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
23 வயதான அன்ஷுல் கம்போஜ் ஹரியானா அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அவர் 19 முதல தர கிரிக்கெட் போட்டிகளிலும், 15 ஏ பிரிவு போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இந்த மாதம் கேரளாவுக்கு எதிரான ரஞ்சி போட்டியில் அன்ஷுல் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அன்ஷுல் கம்போஜ் கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 3 போட்டிகளில் விளையாடினார்.