விளையாட்டு

IPL Auction 2025 : வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்… ரூ. 150 கோடிக்கு மேல் செலவு செய்த அணிகள்…

Published

on

IPL Auction 2025 : வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்… ரூ. 150 கோடிக்கு மேல் செலவு செய்த அணிகள்…

அர்ஷ்தீப் சிங் – ஹேசல்வுட் – ட்ரெண்ட் போல்ட்

Advertisement

முந்தைய ஐபிஎல் ஏலங்களைப் போல் இல்லாமல் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களை வாங்குவதில் ஐபிஎல் அணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

2 ஆவது நாளாக ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்று வரும் நிலையில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மட்டும் ஐபிஎல் அணிகள் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக செலவு செய்துள்ளன. சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் கேம் சேஞ்சர்களாக இருந்து வருவதால் அவர்களை வாங்க அணிகளுக்கு மத்தியில் ஆர்வம் காணப்படுகிறது.

வேகப்பந்து வீச்சாளர்களில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங்கை ரூ. 18 கோடிக்கு ஆர்.டி.எம். முறைப்படி பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. இதேபோன்று நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட்டை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 12.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

Advertisement

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட்டை இதே தொகைக்கு ஆர்சிபி அணி வாங்கியுள்ளது.

அர்ஷ்தீப் சிங் – பஞ்சாப் – ரூ. 18 கோடி

Advertisement

ட்ரெண்ட் போல்ட் – மும்பை – ரூ. 12.50 கோடி

ஜோஷ் ஹேசல்வுட் – பெங்களூரு – ரூ. 12.50 கோடி

புவனேஷ்வர் குமார் – பெஙகளூரு – ரூ. 10.75 கோடி

Advertisement

நடராஜன் – டெல்லி – ரூ. 10.75 கோடி

முகம்மது ஷமி  – ஐதராபாத் – ரூ. 10 கோடி

ஆவேஷ் கான் – லக்னோ – ரூ. 9.75 கோடி

Advertisement

பிரசித் கிருஷ்ணா – குஜராத் – ரூ. 9.50 கோடி

தீபக் சாகர்  – மும்பை  – ரூ. 9.25 கோடி

ஆகாஷ் தீப் – லக்னோ – ரூ. 8 கோடி

Advertisement

முகேஷ் குமார் – டெல்லி – ரூ. 8 கோடி

துஷார் தேஷ் பாண்டே – ராஜஸ்தான் – ரூ. 6.50 கோடி

ஆன்ரிக் நோர்க்கியா – கொல்கத்தா – ரூ. 6.50 கோடி

Advertisement

ராசிக் சலாம் – பெங்களூரு – ரூ. 6 கோடி

கலீல் அகமது – சென்னை – ரூ. 4.80 கோடி

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version