சினிமா
அண்ணனுக்கு கல்யாணம்!! நிச்சயதார்த்ததை முடித்த தம்பி அகில் அக்கினேனி..
அண்ணனுக்கு கல்யாணம்!! நிச்சயதார்த்ததை முடித்த தம்பி அகில் அக்கினேனி..
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் நாகர்ஜுனா தன்னுடைய மகன் நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கு வரும் டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடத்த திட்டமிட்டிருந்தார்.அதற்கான பல வேலைகள் சென்று கொண்டிருக்கும் நிலையில் நாகர்ஜுனா – அமலா தம்பதியருக்கு பிறந்த நடிகர் அகில் அக்கினேனிக்கு தற்போது நிச்சயதார்த்தம் முடித்துள்ளனர்.நாகர்ஜுனாவின் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் அகில் அக்கினேனிக்கும் ஜைனப் ரவுட்ஜி என்ற பெண்ணும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதை அறிவிப்பத்ல் மகிழ்ச்சி என்று நாகர்ஜுனா எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.