சினிமா

அபிஷேக் பச்சனுடன் நடிக்க வாய்ப்பு!! தூக்கி எறிந்த ஐஸ்வர்யா ராய்..

Published

on

அபிஷேக் பச்சனுடன் நடிக்க வாய்ப்பு!! தூக்கி எறிந்த ஐஸ்வர்யா ராய்..

இந்திய சினிமாவில் டாப் ஜோடியாக திகழ்ந்து வரும் அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் பிரிவு பற்றி தான் பாலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.இதுகுறித்து அபிஷேக் பச்சன் வெளிப்படையாக நெக்ட்டிவ் கருத்துக்களை பற்றி யோசிப்பதில்லை என்று கூறி விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.அதேபோல் ஐஸ்வர்யா ராயுன் தன் மகள் பிறந்தநாள் அன்று நிச்சயதார்த்த மோதிரத்தை காட்டியவாறு போஸ் கொடுத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், 2014ல் ஷாருக்கான், அபிஷேக் பச்சன், சோனு சூத், போமன் இராணி, தீபிகா படுகோன், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த ஹேப்பி நியூ இயர் படத்தில் நடிக்க மாட்டேன் என்று நிராகரித்திருந்தார்.தனது கணருடன் நடிப்பதை நிராகரித்தது பற்றி ஐஸ்வர்யா ராய் பேட்டியில் விளக்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு அந்த வாய்ப்பு வந்தது. இது ஒரு நகைச்சுவை படம். நாங்கள் மிகவும் வேடிக்கையாக இருப்போம். இதுஒரு வேடிக்கையான அனுபவமாக இருக்கும் என்று எனக்கு தெரியும்.நாங்கள் ஒருவருக்கொருவர் எதிராக நடிக்க முடியாது. அது மிகவும் விசித்திரமக இருக்கும், அதனால் தான் நான் மறுத்துவிட்டேன் என்று ஐஸ்வர்யா ராய் கூறினார்.இந்த வீடியோ தற்போது வைரலனதை அடுத்து அபிஷேக் பச்சன் அந்த படத்தில் இரண்டாவது ஹீரோ, அதனால் அவர் அவருக்காக தியாகம் செய்திருக்கிறார் இதில் என்ன இருக்கிறது என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version