சினிமா

அமரன் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபாக்கா.. யார் இவர் என்ன செய்கிறார் தெரியுமா?

Published

on

அமரன் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபாக்கா.. யார் இவர் என்ன செய்கிறார் தெரியுமா?

மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்று வரும் படம்தான் அமரன்.முகுந்த் வரதராஜன் மட்டுமின்றி அவரது மனைவி இந்து ரெபாக்கா வர்கீஸின் பல காட்சிகள் இடம்பெற்று மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ரியல் வாழ்க்கையில் இந்து ரெபாக்கா வர்கீஸ்யார்? இப்போது என்ன செய்கிறார் என்று தெரியுமா?கிறிஸ்த்துவரான இந்து கேரளாவை சேர்ந்தவர். கல்லூரி படிப்புக்காக சென்னை வந்த இந்துவின் கல்லூரியில் முகுந்த் படித்துள்ளார். இருவரும் பல ஆண்டுகள் காதலித்து கடந்த 2009ல் திருமணம் செய்துகொண்டனர். 2011ல் அர்ஷியா என்ற பெண் குழந்தை பிறந்தது.பல ஆண்டுகள் காதலித்தும் அவர்களின் திருமண வாழ்க்கை வெறும் 5 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 31 வயதாக இருக்கும் இந்துவின் கணவர் மேஜர் முகுந்த் வரதராஜன் 2014ல் பயங்கரவாதிகளுடன் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். அப்போது அவரது பெண் குழந்தைக்கு 3 வயதுதான் ஆகியிருந்தது.பிரபல ஆங்கில ஊடகத்தில் பேட்டியளித்த இந்து, இன்று நாடு பார்க்க வேண்டியது அவரது(முகுந்த்) வீரத்தைத்தான், என் வருத்தத்தை அல்ல என்று கூறியிருந்தார். அதன்பின் மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்திற்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இந்து பெற்றுக்கொண்டார்.அமரன் படத்தின் பிரமோஷன் சமயத்தில் பேசிய இந்து, முகுந்த் இறந்து முதல் இரண்டு ஆண்டுகள் நான் நிறையை நிகழ்வுகலில் கலந்து கொண்டது எனக்கு பெருமையாக இருந்தது. அதேநேரம் துக்கம் அதிகமாக இருந்தது. அதேசமயம் என் மகளுக்காக இருக்க வேண்டும் என்று உணர்ந்து 8 ஆண்டுகள் முகுந்த் பற்றிப்பேசவில்லை.அந்த நேரத்தில்தான் ராஜ்குமார் எங்களிடம் வந்து பேசியது இந்த யூனிவர்ஸ் ஏதோ சொல்லவருவதாக உணர்ந்து படத்திற்கு ஒப்புக்கொண்டோம். இது முகுந்திற்கு மட்டுமே, இது அவரை மீண்டும் உயிரோடு கொண்டு வந்ததுபோல், அந்த அழகிய தருணங்களை மீண்டும் வாழவிரும்புகிறேன்.இது கடினமானது, அதேசமயம் நிச்சயமாகப்பெருமையாக இருந்தது என்று உணர்ச்சிகரமாக பேசினார் இந்து ரெபாக்கா. தற்போது இந்து ரெபாக்கா வர்கீஸ், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இருக்கும் கிரேஸ்டன்ஸ் என்ற இடத்தில் வசித்து வருகிறாராம்.ஆஸ்திரேலிய பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவதைத்தான் அமரன் படத்தில் ஆசிரியராக பயிற்சி பெறுவது போல் காட்டப்பட்டுள்ளார்கள். என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version