சினிமா

அமரன் வெற்றிவிழா கொண்டாட்டத்திற்கு..அழைக்கப்பட்ட விருந்தினர் இவர் தானா..?

Published

on

அமரன் வெற்றிவிழா கொண்டாட்டத்திற்கு..அழைக்கப்பட்ட விருந்தினர் இவர் தானா..?

முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் அமரன் வியப்பூட்டும் வெற்றியைத் திரைத்துறையில் பதிவு செய்துள்ளது. உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகிய இந்த படத்தின் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.இப் படமானது உணர்வுபூர்வமான திரைக்கதையால் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக பெற்றது.இத்திரைப்படமானது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. உலகம் முழுவதும் இன்றுவரை ரூ. 314 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய சாதனையை எட்டியுள்ளது.இந்நிலையில் தற்போது அமரன் படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடுவதற்காக படக்குழு சிறப்பு விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டிய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு நினைவுப் பரிசுகள் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் முதல்வர் ஸ்டாலின், அமரன் படத்தின் முதல் காட்சி பார்த்தவுடன், “படம் மிக சிறப்பாக உள்ளது!” என்று பாராட்டியதாலேயே அவரிடம் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version